2014-12-18

சென்னை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தமாகா சார்பில் உறுப்பினர் சேர்ப்பு கலந்தாய்வு கூட்டம், பொறுப்பாளர் எஸ்.டி.நெடுஞ்செழியன் தலைமையில் தாம்பரத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தாம்பரம் வேணு, லோகு சுப்பிரமணியம், பொன்ராஜ், ஏழுமலை, லயன் மணி முன்னிலை வகித்தனர். மூத்த நிர்வாகிகள் எம்.எஸ்.அமீது, மாமல்லபுரம் ஜனார்த்தனம், கத்திப்பாரா ஜனார்த்தனன், தாம்பரம் நாராயணன், பகத்சிங் மற்றும் முருகன் ராணி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உறுப்பினர் சேர்ப் பது தொடர்பாக பேசினர். இந்த கூட்டத்தில், மேலிட பார்வையாளராக முன்னாள் எம்பி ராணி கலந்து கொண்டார்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து எஸ்.டி.நெடுஞ்செழியன் பேசுகையில், ‘‘தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உத்தரவுபடி, ஜனவரி 25ம்தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை முடிக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

உழைக்கும் தொண்டர்களுக்கே பதவி வழங்க வாசன் முடிவு செய்துள்ளார்.இந்த மாவட்டத்தில் தனி ஆவர்த்தனம் நடத்த அனுமதிக்க மாட்டோம். உறுப்பினர் சேர்ப்பு முடிந்த உடன் உறுப்பினர்கள் மாநாடு வாசன் தலைமையில் பிரமாண்டமாக நடத்தப்படும். உறுப்பினர் சேர்ப்பவரின் புகைப்படம், முகவரிகள் அனைத்தும், மாவட்டம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் வெளியிடப்படும். மற்ற மாவட்டங்களை விட காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழும்’’ என்றார்.

Courtesy: Dinakaran