2018-04-4

201804041546389669_Cauvery-Management-Board-in-GK-Vasan-signature-movement-in_SECVPFகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே.வாசன் தலைமையில் தஞ்சையில் இன்று கையெழுத்து இயக்கம் நடந்தது.

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பொதுமக்கள், வியாபாரிகள், பஸ் பயணிகள், மாணவ- மாணவிகள் ஆகியோரிடம் கையெழுத்துகளை பெற்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தவறி விட்டது. மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து இன்று தஞ்சையில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி கொண்டிருக்கிறோம். தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர், மாணவ- மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் போராடி வருகிறார்கள்.

காவிரி பிரச்சினைக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் விதமாக பிரதமர் மோடிக்கு இ-மெயில் அனுப்பும் போராட்டம் நடந்து வருகிறது. இன்று கூட பல லட்சக்கணக்கான மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி திருச்சி உழவர் சந்தையில் வருகிற 6-ந் தேதி உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பழைய பஸ் நிலையத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஜி.கே.வாசன் நிர்வாகிகளுடன் ரோட்டில் அமர்ந்து சில நிமிடங்கள் கோ‌ஷங்களை எழுப்பியப்படி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.