2017-07-23

தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கக் கூடாது என்று த.மா. கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலுக்கான அட்டவணையை அடுத்த வாரத்தில் வெளியிட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும் தமிழகத்தில் தாய் மொழி தவிர பிற மொழிகளை விருப்பப்பட்டால் தெரிந்து கொள்ளலாம் என்றும் , மத்திய அரசு திணிக்க கூடாது எனவும் வாசன் வலியுறுத்தினார்.