2017-07-23

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்தால் யாராலும் அதை தடுக்க முடியாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். கமல் ஆற்றல்மிக்கவர், உலகளவில் புகழ்பெற்றவர், யாரும் எதையும் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை,நடிகர் கமலை யாரும் இயக்கவில்லை எனவும் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். மேலும் ஒஎன்ஜிசி திட்டத்தை நிறுத்த வேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், தமிழகத்தில் ஊழலை தடுக்க லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டுவர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.