2018-04-4

மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் அதிகப்படியான வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வந்து அவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.