2018-06-14

குறிப்பாக நவம்பர் 2015 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவையை வழங்கக்கோரியும், 2017-க்குப் பிறகு ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்பு சம்பளம் போன்றவற்றை வழங்கவும் வலியுறுத்துகின்றனர். இப்படி தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சுமூகத்தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க தமிழக அரசு தவறியுள்ளது.

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் கிடைத்தால் தான் அவர்கள் ஓய்வு காலத்தில் ஓரளவிற்கு நிம்மதியாக வாழ முடியும். ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கின்ற பணத்தை வைத்துத்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழலும் உள்ளது. மேலும் இன்றையப் பொருளாதாரப் பிரச்சினையில் தனது வாழ்வாதாரத்திற்கும், தனது குடும்ப வாழ்வாதாரத்திற்கும் அவர்களுக்கு அரசால் கிடைக்க வேண்டிய சலுகைகள், உதவிகள் உள்ளிட்ட அனைத்தும் தொடர்ந்து கிடைக்க வேண்டும்.