2017-09-5

ஒரு குறிப்பட்ட கால அவகாசத்துக்குள் மாநகராட்சி அலுவலர்கள் கூட்டத்தை கூட்டி ஆய்வு நடத்தி, மேலும் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுத்து நிறுத்திட வேண்டும்.

மேட்டூர் அணையில் தற்போது 60 அடி நீர்மட்டம் உள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கர்நாடகா 110 டிஎம்சி தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் 20 டிஎம்சி தண்ணீரே திறந்து உள்ளது.

எனவே தமிழகத்தில் 100 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்ய 90 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும்.

இதனை மாநில அரசு வலிறுத்தி, மத்திய அரசு நடுநிலையுடன் நடந்து கொண்டு தமிழக விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும்.

அரியலூர்  அனிதா உயிரிழந்துள்ள நிலையில், திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளது.

எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் இது குறித்து எங்கள் நிலைப்பாட்டை கடிதம் அனுப்பி உள்ளோம் என்று கூறினார்.