2017-08-31

ஜி.கே.மூப்பனாரின் 16-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தின் பின்புறம் அமைந்துள்ள மூப்பனார் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

காலை 9.30 மணி அளவில் மூப்பனாரின் மகனும், த.மா.கா. தலைவருமான ஜி.கே.வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் சர்வமத பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாபா. பாண்டியராஜன், கே.பி. முனுசாமி, ஜே.சி.டி. பிரபாகர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்.

த.மா.கா. மாநில நிர்வாகிகள் கத்திபாரா ஜார்த்தனன், விடியல் சேகர், முனவர்பாட்சா, சைதை நாகராஜன், டி.வி. முருகன், கே.டி.எஸ்.ராஜா, தி.நகர் கோதண்டன், சிவபால், மாநில இணை செயலாளர் பூந்தமல்லி ஜெயக்குமார், வேளச்சேரி மணிக்கண்ணன், மாநில பொதுச்செயலாளர்கள் ஞானசேகரன், ஜவகர்பாபு.

மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், ரவிச்சந்திரன், அருண்குமார், பிஜு சாக்கோ, மாவட்ட நிர்வாகிகள் நாஞ்சில் நேசய்யா, கிண்டி மம்மு, நரேஷ்குமார், மோகனகிருஷ்ணன், மடுவை சரவணன், ஈகை சரவணன், சாம்ராஜ், வடபழனி மகிழ்ணன்.

பகுதி தலைவர்கள் கோயில் பாஸ்கர், கோட்டூர் மதன கோபால், பாண்டி பஜார் பழனி, காரல் மாசிலா மணி, ஆலந்தூர் பாஸ்கர், நுங்கை வடிவேலு, வட்ட தலைவர்கள் சின்னமணி, மோகன், பாலாஜி, ஞானகுரு, ஈகை லோகநாதன், மடுவை சுந்தர்ராஜ், கிண்டிகுமார், தீனன், பக்கிரிசாமி, புனிதன், பத்மநாபன், பாரதிபாபு, சாந்தாராம் உள்பட ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.