2018-06-14

அனுமதியின்றி மணல் அள்ளுவதை தமிழக அரசு ஏன் கண்டு கொள்வதில்லை என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு நிர்ணயித்தபடி மணல் குவாரிகளில் ஒரு லோடு மணல் விலை ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து ரூ840. ஆனால் சந்தையில் ஒரு லோடு மணலானது குறைந்தது ரூ15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதனையெல்லாம் தமிழக அரசு ஏன் கண்டுகொள்ளவில்லை. என்ன காரணத்திற்காக மணல் விலையேற்றத்தை அனுமதிக்கிறது. மணல் விலை அதிகரித்தால் சாமானிய மக்களால் அவசியத் தேவைக்காகக் கூட கட்டுமானப்பணிகளை செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.