2015-01-28

இளைஞர் அணியின் ரத யாத்திரை தொடக்க நிகழ்ச்சியில்…
த.மா.கா. உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு பஸ் பிரசாரத்தை ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 32 லட்சம் உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு பஸ் பிரசாரம் தொடங்கப்படும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியிருந்தார்.அதன்படி பஸ் பிரசார இயக்க தொடக்க விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகில் நடந்தது. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அங்கு வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பஸ் பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.இந்த பஸ் பிரசார இயக்கம் தமிழ்நாடு முழுவதும் 15 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து கட்சியில் பெருமளவில் இளைஞர்களை சேர்க்க பாடுபடும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம், ஞானசேகரன், முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், கார்வேந்தன், ராணி மற்றும் விடியல் சேகர், பிஜு சாக்கோ, பி.என்.அசோகன், டி.எம்.பிரபாகர், கோவிந்தசாமி, ஜவகர்பாபு, மயிலை சத்யா, ஆவடி விக்டர் மோகன், ஜி.ஆர்.வெங்கடேசன், விக்டரி ஜெயக்குமார், அனுராதாஅபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

10857337_777121582362783_4854207226696960590_o